கோவில் பெயர் : அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில்.
சிவனின் பெயர் : தான்தோன்றியப்பர் ( சுயம்புநாதர்)
அம்மனின் பெயர் : வாள்நெடுங்கன்னி
தல விருட்சம் : கொன்றை,பாக்கு, வில்வ
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் , ஆக்கூர்-609301 நாகப்பட்டினம் மாவட்டம்.
Ph:98658 09768, 9787709742
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 109 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* காசியை விட வீசம் அதிகம்: கோயிலின் பின்புறத்தில் உள்ள விநாயகருக்கு பொய்யா விநாயகர் என்றுபெயர். இவர் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், ""சிவனுக்கு கோயில் கட்ட வேண்டும், ஆனால் சுவர் இடிகிறது'' என்கிறார். அதற்கு விநாயகர் இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கு. பதில் கிடைக்கும் என்கிறார். ராஜாவுக்கோ, குளத்தில் மூழ்கினால் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர் காசியை விட வீசம் அதிகம் இந்தக்குளத்தில். காசியில் விட்ட பொருள்கள் எல்லாம் இந்த குளத்தில் கிடைக்கவே மன்னனின் சந்தேகம் தீர்ந்தது. இருந்தும் குளத்தில் மூழ்கிய மன்னன் இறைவனை நினைத்து எழுந்தான். கூடவே கோயிலின் கர்ப்பக்கிரகமும் வந்தது. மகிழ்ச்சியடைந்த மன்னன் மீதி கோயிலை கட்டி முடித்தான்.
* இது ஒரு சிறந்த பரிகார ஸ்தலமாகும்.சுவாமிக்கு அம்பாள் வலது பக்கத்தில் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமணம் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் செய்தால் திருமணம் நிச்சயம். குழந்தை வரம் வேண்டி சந்தான கோபாலகிருஷ்ண யாகம் செய்தல் சிறப்பு.
0 Comments: