கோவில் பெயர் : அருள்மிகு மாயூரநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : மாயூரநாதர் ( வள்ளலார்)
அம்மனின் பெயர் : அபயாம்பிகை, அஞ்சொல்நாயகி
தல விருட்சம் : மாமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 5.30 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோவில்,
மயிலாடுதுறை - 609 001. நாகப்பட்டினம் மாவட்டம்.
Ph: 04364 -222 345, 223 779, 93451 49412 ,223 207
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* சோழர்களால் கட்டப்பட்டது
* இது 102 வது தேவாரத்தலம் ஆகும்.
* இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படும். இத்தல விநாயகர் அகத்திய விநாயகர் எனப்படுகிறார். இங்குள்ள கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. இங்கு நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் அருள்புரிகிறார்.
* செய்த தவறுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு வேண்டுபவர்கள் காவிரியில் நீராடி சிவனை வழிபட்டு மனஅமைதி பெறலாம். இங்கு நடனம் பயில்பவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
0 Comments: