வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு  முக்தீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்

அம்மனின் பெயர் :  பொற்கொடியம்மை, சொர்ணவல்லி

தல விருட்சம்     :    மந்தாரை

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை, 
                                                         மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    முகவரி : அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில்
சிதலைப்பதி - 609 503. திருவாரூர் மாவட்டம்.
 Ph:04366 - 238 818, 239 700, 94427 14055.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 121 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* மனித முக விநாயகர்: இத்தலத்தில் அருளும் சிவன், முன்னோர்களுக்கு முக்தி தருபவராக அருளுவதால் இவரை "முக்தீஸ்வரர்' என்றே அழைக்கிறார்கள். 

* முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (சிதலைப்பதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. ராமர் திலம் (எள்) வைத்து தர்ப்பணம் செய்த தலம் என்பதால், "திலதர்ப்பணபுரி' என்றழைக்கப்பட்ட ஊர் பிற்காலத்தில், "சிதலைப்பதி' என்று மருவியது. இக்கோயிலில் விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சன்னதியில் இருக்கிறார். இதனை கஜமுகாசுரனை வதம் செய்ததற்கு முன்புள்ள கோலம் என்கிறார்கள். இவரை, "ஆதி விநாயகர்' என்று அழைக்கிறார்கள். இவரது சன்னதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டினால் நியாயமான கோரிக்கைகள நிறைவேறுவதாக நம்பிக்கை. இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார்.

* ஜாதகத்தில் தோஷம், பித்ருதோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கு முக்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ள பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: