கோவில் பெயர் : அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : சித்தநாதேஸ்வரர்
அம்மனின் பெயர் : சவுந்தர்யநாயகி
தல விருட்சம் : பவளமல்லி
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோவில்,
திருநறையூர்- 612 102. தஞ்சாவூர் மாவட்டம். Ph: 04352467343
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 128 வது தேவாரத்தலம் ஆகும்.
* இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மகாலட்சுமியின் அவதார தலமென்பதால், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, "மழலை மகாலட்சுமி' என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.
* பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதியில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பது விசேஷமான அமைப்பு.
* கோஷ்டத்தில் உள்ள துர்க்கை, "பிரசன்ன துர்க்கை' என்று அழைக்கப்படுகிறாள். இவள் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி, நளினமாக வலது காலை சற்று முன்புறமாக வைத்திருக்கிறாள். துர்க்கையின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது.
* சரியாக பேச்சு வராதவர்கள், குரல் வளம் சிறக்க வேண்டுபவர்கள் இங்கு சிவன், அம்பாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். தோல்நோய் நீங்க இங்குள்ள சித்தரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
*
0 Comments: