கோவில் பெயர் : அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : சுவேதாரண்யேஸ்வரர்
அம்மனின் பெயர் : பிரமவித்யாம்பிகை
தல விருட்சம் : வடவால், கொன்றை, வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை ,
மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை
முகவரி : அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில்,
திருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம். Ph:04364 256 424.
கோவில் சிறப்பு :
* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது
* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 11 வது தேவாரத்தலம் ஆகும்.
* நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.
* தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
* அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும்.
* கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா. பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும். இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
0 Comments: