புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : திருவலஞ்சுழிநாதர்

அம்மனின் பெயர் : பெரியநாயகி

தல விருட்சம்   :  வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை,
                                                       மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில், 
திருவலஞ்சுழி - 612 302. தஞ்சாவூர் மாவட்டம்.Ph: 0435 245 4421, 245 4026

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

* இது 88 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என பெயர் பெற்றார்.

* அம்பாள் வலப்பக்கம் திருமணக் கோலக்காட்சி தருகிறார். இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்புவாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவ மூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவராக விளங்கியமையால் அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சனீஸ்வரர் சன்னதி உள்ளது.

* இங்கு வேண்டிக்கொள்ள திருமணத்தடைகள் நீங்கும். முகம் பொலிவு பெறும் என்பது நம்பிக்கை
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: