வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்(திருமயானம்)



கோவில் பெயர்  : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : பிரம்மபுரீஸ்வரர்

அம்மனின் பெயர் : மலர்க்குழல் மின்னம்மை, அம்மலக்குஜ நாயகி


கோவில் திறக்கும் நேரம் :   காலை  6.30 மணி முதல் 1 மணி வரை,
                                                         மாலை 4  மணி முதல் இரவு 7 மணி வரை.

முகவரி : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர் - 609 311. நாகப்பட்டினம் மாவட்டம். 
Ph:  04364 - 287 429,287 222, +91- 94420 12133

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* சோழனால் இத்தலம் கட்டப்பட்டது.

* இது 111 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்குள்ள சிங்காரவேலர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார். இவரது சிலை, வில்லேந்திய ராமன் போல நளினமாக, இடப்புறமாக சற்றே சாய்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், கடவூர்மயானம் என்றும், திருமெய்ஞானம் என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு. திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கும் பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஐதீகம். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியுடன் ஆறு சீடர்கள் உள்ளனர். கல்லால மரம் இல்லை. கல்வியில் சிறந்து விளங்க இத்தல சிவனையும் இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறப்பு.

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: