கோவில் பெயர் : அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : உச்சிரவனேஸ்வரர்
அம்மனின் பெயர் : வேயுறுதோளியம்மை
தல விருட்சம் : மாமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார்) திருக்கோவில் , திருவிளநகர் (ஆறுபாதி) Po, நாகப்பட்டினம் - 609 309,
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 103 வது தேவாரத்தலம் ஆகும்.
* இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
* கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் உள்ளன. ராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம், நந்தி, ஆஸ்தான மண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் வடபுறத்தில் அம்மன் தென்புறம் நோக்கி அருள்பாலிக்கிறார். சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுற்றுப்பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை, விநாயகர், சோமாஸ்கந்தர், நால்வர், கஜலட்சுமி, நடராஜர், நவகிரகங்கள், சனிபகவான், பைரவர், சூரியன் ஆகியோர் அருளுகின்றனர்.
* அம்மன் வேயுறுதோளியம்மை சங்கு, சக்கரத்துடன் பக்தர்களை காப்பாற்றுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
* எந்தவித பிரச்னையாக இருந்தாலும் இங்கு வந்து தரிசனம் செய்தால் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தலவிருட்சமான விழல் செடியில் முடிச்சு போட்டு வேண்டிக்கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
0 Comments: