கோவில் பெயர் : அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்)
அம்மனின் பெயர் : பாலாம்பிகை
தல விருட்சம் : வன்னி
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 .மணி முதல் 12. மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
முகவரி : அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவில்,
திருவாசி-621 216. திருச்சி மாவட்டம். Ph: 0431 - 6574 972, +91-94436 - 92138.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 62 வது தேவாரத்தலம் ஆகும்.
.* கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
* கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரகத்தில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யூஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி இருக்கிறது. பிரகாரத்தில் சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது.
* பாலாம்பிகை சன்னதிக்கு எதிரே செல்வ விநாயகர் சன்னதியும், அன்னமாம்பொய்கை தீர்த்தமும் இருக்கிறது. இத்தலத்தின் தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர்..
* சுவாமிக்கு இலுப்பை எண்ணெய் விளக்கு போட்டு வழிபட்டால் குடும்பம் சிறக்கும், தோஷங்கள் நீங்கும், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
0 Comments: