ஞாயிறு, 26 ஜூன், 2016

அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : யோகநந்தீஸ்வரர், சிவயோகிநாதர்

அம்மனின் பெயர் : சவுந்தரநாயகி

தல விருட்சம் : வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6.மணி முதல் 12.30 மணி வரை, 
                               மாலை 3 மணி முதல் இரவு  8.30 மணி வரை

முகவரி : அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோவில், 
திருவிசநல்லூர்- 612 105.தஞ்சாவூர் மாவட்டம்
Ph.0435-200 0679, 94447 47142

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 43 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
.
* இங்கு நந்தி ரிஷபவாகனமாக காத்து நிற்பதால், ரிஷப ராசிக்காரரர்களின் (கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரம்) பரிகார தலமாக விளங்குகிறது. இவரை பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் வழிபடுவது சிறப்பு.

* சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது. கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே
சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில்
சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.

* தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில் இது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: