கோவில் பெயர் : அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : அபிமுக்தீஸ்வரர் ( பிரிய நாதர்)
அம்மனின் பெயர் : அபினாம்பிகை (ஏழவார் குழலி)
தல விருட்சம் : வன்னி
கோவில் திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 11 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை -610 104,
Ph:04366 - 325 425
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 155 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
* பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
* கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கிறார்கள்.
* திக்குவாய் உள்ளவர்கள், பேசும் ஆற்றல் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். சுக்கிரனுக்குரிய பரிகார ஸ்தலம். கடன் பிரச்னை உள்ளவர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
0 Comments: