வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள்  திருக்கோவில்

பெருமாள் பெயர்   :  ஆதிகேசவப்பெருமாள்

அம்மனின் பெயர் :  சவுந்திரவல்லி

தல விருட்சம்     :   இலந்தை

கோவில் திறக்கும் : காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் சுவாமி திருக்கோவில், பவானி - 638 301, ஈரோடு மாவட்டம்.Ph:04256 - 230 192.

கோவில் சிறப்பு : 

* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* ஆதிகேசவர் சிலை முழுக்க சாளக்கிராமத்தால் செய்யப்பட்டதாகும். பிரதோஷ நாளன்று லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. அந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் பயங்கள் நீங்கும், எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்கிறார்கள்

* திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு நைவேத்யம் படைத்து, திருமஞ்சனங்கள் செய்து வழிபடுகின்றனர். புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் பெருமாளுக்கு பாசிப்பருப்பு நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: