செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு  அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  அதுல்யநாதேஸ்வரர்

அம்மனின் பெயர் :   அழகிய பொன்னழகி

தல விருட்சம்     :   வில்வம்

கோவில் திறக்கும்: காலை 7 மணி முதல் 10 மணி வரை, 
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி     

முகவரி : அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில், அறகண்டநல்லார்-605 752 திருக்கோவிலூர் வட்டம், 
விழுப்புரம் மாவட்டம்.Ph:93456 60711, 99651 44849
கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 223 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கிறது.


* மலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. கருவறையை சுற்றி அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. தல விநாயகர் வலம்புரி விநாயகராக சுயம்புவாக இருக்கிறார். பிரகாரத்தில் உள்ள முத்துக்குமாரர் ஒரு முகமும், ஆறு கரங்களுடன் காட்சி தருகிறார். ராமலிங்க வள்ளலார் இவரை வணங்கி பாடல் பாடியிருக்கிறார். சப்தமாதாக்கள் சன்னதியில் விநாயகர், ஐயப்பன் ஆகியோரும் உள்ளனர். மகாவிஷ்ணு இங்கு வழிபட்டதை குறிக்கும் விதமாக பிரகாரத்தில் கையில் பிரயோகச் சக்கரத்துடன் மகாவிஷ்ணுவும், ஸ்ரீதேவியும் இருக்கின்றனர். ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவை ஒன்று இருப்பது போலவும், அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.

* திருமண, புத்திர தோஷங்கள் நீங்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: