செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  சிஷ்டகுருநாதேஸ்வரர் (பசுபதீஸ்வரர்)

அம்மனின் பெயர் :  சிவலோகநாயகி (பூங்கோதை)

தல விருட்சம்     :   கொன்றை

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை       

முகவரி : அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில், திருத்துறையூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் - 607 205
.Ph: 04142 - 248 498, 94448 07393.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 226 வது தேவாரத்தலம் ஆகும்.

* சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி சன்னதிக்கு அருகே சிவன், சுந்தரருக்கு காட்சி தந்த சிற்பம் உள்ளது. பிரகாரத்தில் பைரவர், சூரிய லிங்கம், ராமலிங்கம், பீமலிங்கம், சூரியபகவான், ஆதிகேசவ பக்தவச்சலர், கஜலட்சுமி ஆகியோரும் இருக்கின்றனர். இங்குள்ள நர்த்தன விநாயகர் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார்.

* குருதலம் என்பதால் இங்கு சிவன், தெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: