கோவில் பெயர் : அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : பசுபதீஸ்வரர்( பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர் )
அம்மனின் பெயர் : அலங்காரவல்லி , சௌந்தரநாயகி, கிருபா நாயகி.
தல விருட்சம் : வஞ்சி
கோவில் திறக்கும் நேரம் :காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி
முகவரி : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்-639 001. கரூர்மாவட்டம்.Ph:04324 - 262 010
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 211 வது தேவாரத்தலம் ஆகும்.
* இது 211 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், சிறிது சாய்வாக உள்ளது. ஆவுடையார் சதுரமாக உள்ளது.மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது.
* கோயிலுக்குள் நுழையும்போது கருங்கல்லால் ஆன கொடிமரம் (துவஜஸ்தம்பம்) உள்ளது. இதில் ஒரு பக்கத்தில் புகழ் சோழ நாயனார்கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு, சிவலிங்கத்தை நாவால் வருடுவதுபோலவும், அதன் பின் கால்களுக்கிடையில், பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது. புகழ்ச்சோழர் மண்டபம் - நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று. நடராஜர் சன்னதியும், கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி முதலியவையும், உள் பிராகாரத்தில் ஒரு சுவாமி சன்னதியும், இலக்குமி சன்னதியும் அடுத்து ஆறுமுகர் சன்னதியும் உள்ளது.
* ஆனிலையப்பரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோருக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
0 Comments: