சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : கண்ணாயிரநாதர்

அம்மனின் பெயர் :  கைலாச நாயகி

தல விருட்சம்     :  பலா மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 7 மணி முதல் 11 மணி வரை, 
                              மாலை  5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு கைலாச நாயகி சமேத கண்ணாயிரநாதர் திருக்கோவில்,திருக்காரவாசல், திருவாரூர் மாவட்டம்.
Ph: 04366-247 824, +91- 94424 03391

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 183 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* கிழக்கு நோக்கிய கோயில். வலப்பால் கோயில் அலுவலகமுள்ளது. ராஜகோபுரமில்லா. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் நந்தி உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலைத்தாண்டி உட்சென்று வலமாக வரும்போது, தலப்பதிகக் கல்வெட்டு, சுந்தரர் (உற்சவர்) சன்னதி, தியாகராஜசபை, விநாயகர் பல சிவலிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஆறுமுகசுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சன்னதிகள் உள்ளன.

* சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால் பாவங்களும், சாபங்களும் விலகும் என்பது நம்பிக்கை. கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து தீர்த்தத்தில் நீராடி, பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பிரசாதமாக பெற்று சாப்பிட்டு வந்தால் நோய் விரைவில் குணமாகும் என்பதும், தோல் சம்பந்தப்பட நோய் உள்ளவர்கள் பவுர்ணமி நாட்களில் தரப்படும் சேஷ தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் என்பதும் நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: