கோவில் பெயர் : அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோவில்
பெருமாள் பெயர் : லட்சுமி நாராயணர்
அம்மனின் பெயர் : லட்சுமி
கோவில் திறக்கும் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
சனிக்கிழமை காலை 8 - மாலை 6 மணி வரை திறந்திருக்கும்
முகவரி : அருள்மிகு அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோவில்,
காரிசேரி- 626 119 விருதுநகர் மாவட்டம். Ph: 98423 64059.
கோவில் சிறப்பு :
* 500 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இங்கு மார்கழி திருவோண நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சனிக்கிழமைகளில், நவக்கிரக தோஷ பரிகாரத்திற்கும் யாகம் நடத்துகின்றனர்.
* பொதுவாக விரதம் இருப்பவர்கள் ஒரு வாரம், ஒரு மண்டலம் என குறிப்பிட்ட நாட்கள் விரதம் இருந்து சுவாமியை வழிபடுவார்கள். ஆனால், இங்கு மார்கழி மாதத்தில், திருவோண நட்சத்திரத்திற்கு முன்பு, 28 நாட்கள் விரதம் இருந்து, பின்பு லட்சுமி நாராயணரை வணங்குகிறார்கள். இதனால், கோரிக்கைகள் நிறைவேறும் என்பதுநம்பிக்கை. பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை சாப்பிட்டால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.
0 Comments: