கோவில் பெயர் : அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : பாரிஜாதவனேஸ்வரர் என்ற களர்முளைநாதேஸ்வரர்
அம்மனின் பெயர் : பெரிய நாயகி, பிருகந் நாயகி
தல விருட்சம் : மாமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
முகவரி : அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோவில்,கோவிலூர், முத்துப்பேட்டை - 614 704. திருவாரூர் மாவட்டம். 04369 - 262 014, 99420 39494
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 170 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
* வெண்மை நிறத்துடன் அமிர்த சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கருவறைச்சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும், மூன்று திருவடிகளுடன் காட்சி தருகிறார்.
* கோயில் 5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரங்களுடன் விளங்குகிறது. கோயிலின் மேற்கு பகுதியில் வருணன் பூஜித்த லிங்கம், ராமர் பூஜித்த லிங்கம், மார்க்கண்டேயர் பூஜித்த லிங்கம், விஸ்வாமித்திரர் பூஜித்த லிங்கம் உள்ளது. மிகவும் பழமையான கோயில் என்பதால் இங்கு நவகிரகம் கிடையாது. நவகன்னிகைகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள்.
* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
0 Comments: