கோவில் பெயர் : அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோவில்
சிவனின் பெயர் : நடுதறியப்பர், வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறிநாதர்
அம்மனின் பெயர் : ஸ்ரீ வல்லிநாயகி, மாதுமைநாயகி
தல விருட்சம் : கல்பனை
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோவில், கோவில் கண்ணாப்பூர்(வழி) திருவாரூர் மாவட்டம்..Ph: 04365 - 204 144, 94424 59978
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 184 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடுதறிநாதர் திருமுடியில் கோடரியின் வெட்டுக்காயம் இன்றும் உள்ளதைக் காணலாம்.
* உள்பிரகாரத்தில் விநாயகர், சுந்தரேசுவரர், அறுவகை விநாயகர், முருகன், துர்க்கை, இலிங்கோத்பவர், கற்பகநாதர் முதலிய சன்னதிகள் உள்ளன. சனிபகவானை அடுத்துள்ள நால்வர்களுள் இருவர் சம்பந்தராகவும் இருவர் அப்பராகவும் காட்சி தருகின்றனர்- மற்றிருவர் இல்லை.
* கண் நோய் நீங்க ஞானகுப தீர்த்தத்தில் நீராடியும், குழந்தைப்பேறு, புகழ் பெற இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
0 Comments: