கோவில் பெயர் : அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோவில்
பெருமாள் பெயர் : பாண்டுரங்கன்
அம்மனின் பெயர் : ரகுமாயீ
தல விருட்சம் : தமால மரம்
கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோவில், தென்னாங்கூர் - 604 408. திருவண்ணாமலை மாவட்டம் Ph: 04183-225 808
கோவில் சிறப்பு :
* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் மிக அழகாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு யந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும், ஸ்ரீசக்ரத்தின் அதி தேவதைகள் "மஹாசோடஷி' என்ற திருநாமத்தில் ஒரே வடிவில் அருள்பாலிக்கின்றனர். யந்திர வழிபாடான ஸ்ரீசக்ரத்திற்கு "மகா மேரு' அமைப்பை ஏற்படுத்தி பூஜை செய்வது மாபெரும் பலன் தரக்கூடியது. இந்த மகா மேரு தான் மகா சோடஷியாக இத்தலத்தில் விளங்குகிறது. ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை பிரிவு உள்ளதோ அத்தனை பிரிவிற்கும் உள்ள தெய்வங் களான "மகாசோடஷி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசுவரன், விநாயகர், பாலா, அன்னபூரணி, அச்வாரூடா, ராஜமாதங்கி, வராஹி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, பராசரஸ்வதி, மேதாதட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிமகாலட்சுமி, பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மாகேந்திரி, சாமுண்டா,மகாலட்சுமி ஆகியோர் இத்தலத்தில் விக்ரக வடிவில் இருப்பது மிகவும் விசேஷம்.
* குழந்தை பாக்கியத்திற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்
0 Comments: