ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : சிவக்கொழுந்தீஸ்வரர்

அம்மனின் பெயர் :   ஒப்பிலாநாயகி

தல விருட்சம்     :   கொன்றை

கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துக்கொண்டு சென்றால் சுவாமியை தரிசிக்கலாம்.

முகவரி : அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில், ஆலப்பாக்கம் வழி, தீர்த்தனகிரி. 608 801, கடலூர் மாவட்டம்.Ph: 91-94434 34024

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 216 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த சிவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி சுவாமி மீது விழுகிறது.

* கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். 

* நிருத்த விநாயகர் புடைப்புச்சிற்பமாக இருக்கிறார். அருகில் நான்கு பூதகணங்கள் அவரை வணங்கியபடி இருக்கிறது. சிவன் உணவு சாப்பிட்ட கொன்றை மரம் பிரகாரத்தில் இருக்கிறது. இத்தலத்தின் தலவிநாயகர்- வலம்புரிவிநாயகர். 

* கோயிலில் 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்கு வெளியே இருப்பது வித்தியாசம்! பின் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் கடந்து சென்றால் மூன்று நிலைகள் கொண்ட அழகிய கட்டமைப்பு கொண்ட அகன்ற ராஜகோபுரம் எழில் கொஞ்சுகிறது! உள்ளே நேராக பிரதோஷ நந்தி வீற்றிருக்கின்றார். அவர் முன்னே 35 துவாரங்கள் கொண்ட சாளரம் பார்க்க வசீகரிக்கின்றது. மூடுதளத்துடன் கூடிய மகாமண்டபம், ஸ்பநன மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என சுவாமி சன்னதி அமைந்துள்ளது. தென்திசை நோக்கியுள்ள நடராஜப் பெருமான் அன்னை சிவகாமியோடு அற்புதமாய் தரிசனம் தந்தருள்கின்றார்.

* விவசாயம் செழிக்கவும், நாட்டியத்தில் சிறக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: