வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : தூவாய் நாதர்

அம்மனின் பெயர் :  பஞ்சின் மென்னடியாள்

தல விருட்சம்     :   பலாமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
                                                 மாலை  5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோவில்,திருவாரூர் கீழவீதி, திருவாரூர்ப் பரவையுள் மண்டளி, தூவாநாயனார் கோவில் - 610 002.
Ph: 04366 - 240 646, 99425 40479

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 151 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.கோயிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். ஒரு காலத்தில் இக்கோயில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது.

* கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும் என்பது நம்பிக்கை.

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: