கோவில் பெயர் : அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : ( நர்த்தன வல்லபேஸ்வரர்)
அம்மனின் பெயர் : ஞானசக்தி, பராசக்தி.
தல விருட்சம் : கல்லால மரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
முகவரி:அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில்,
திருக்கூடலையாற்றூர் - 608 702 கடலூர் மாவட்டம்.Ph:04144-208 704.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 214 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் முதல் மூன்று தேதியில் மூலவரின் மீது சூரிய ஒளிபட்டு சூரியபூஜை நடக்கிறது.
* பொதுவாக சிவன் கோயில்களில் சிவனுடன் ஒரு அம்மன் சன்னதி இருப்பது வழக்கம். ஆனால், மிக அபூர்வமாக சில கோயில்களில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. கடலூர் மாவட்டம் திருக்கூடலையாற்றூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் ஞானசக்தி, பராசக்தி என்ற பெயர்களில் அம்மன் அருள்பாலிக்கிறாள். ஞானசக்தி சன்னதியில் குங்குமமும், பராசக்தி சன்னதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு விருத்தியாகும். ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தை சுந்தரர் பாடியுள்ளார்.
* கல்வியில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது
0 Comments: