கோவில் பெயர் : அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : வண்டுறைநாதர், பிரமரேசுவரர்
அம்மனின் பெயர் : வேனெடுங்கண்ணி, பிரகதாம்பாள் பாஷினி)
தல விருட்சம் : வில்வ மரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 11 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோவில்
திருவண்டுதுறை (Po)- திருவாரூர் மாவட்டம் - 614 717.Ph: 04367-294 640
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 176 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
* மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த சன்னதி. அம்மன் தெற்கு பார்த்த சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் சுற்றுப்பகுதியில் விநாயகர், முருகன், அர்த்தநாரீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, பைரவர், விசுவநாதர், விசாலாட்சி, சம்பந்தர், சனிபகவான், சூரியன், சந்திரன், பிட்சாடனர், சண்டிகேசுவரர், நவகிரகங்கள் ஆகியன அமைந்துள்ளன.
* செய்யும் தொழில்களில் தடங்கல் ஏற்பட்டால் இங்கு வழிபாடு செய்து தீர்வு காண்கின்றனர்.
0 Comments: