செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு மருந்தீசர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  மருந்தீசர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்)

அம்மனின் பெயர் :  ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி

தல விருட்சம்     :   மருதமரம்

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 8மணி வரை      

முகவரி : அருள்மிகு மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்) திருக்கோவில் .
டி. இடையாறு-607 209, திருக்கோயிலூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம்
Ph: 04146 216 045, 206 515, 94424 23919, 98847 77078

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 224 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

* அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களை சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

* நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: