புதன், 26 அக்டோபர், 2016

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் ,குமரன் குன்றம் சென்னை

கோவில் பெயர் :  அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் 

முருகன் பெயர்  :               பாலசுப்பிரமணியர், சுவாமிநாதசுவாமி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை 
                                               மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

முகவரி : அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில், 
குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை 

கோவில் சிறப்பு : 



* குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம், "குமரன் குன்றம்' என்றழைக்கப்படுகிறது. சித்திரை பிறப்பின்போது, இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார்.

* பிரார்த்தனை திருமண, புத்திர தோஷம் நீங்க இத்தல முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள முருகன் வடக்கு திசை நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவருக்கு மங்கலப்பொருட்கள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். எனவே இவரை பக்தர்கள், "ஐஸ்வர்ய முருகன்' என்றும் அழைக்கிறார்கள். நேர்த்திக்கடன்: முருகன், சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். தலபெருமை: மலைக்கோயில்களான திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது. இங்குள்ள காளி, ஜெயமங்களதன்மகாளி என்றழைக்கப்படுகிறாள். தன்னை வேண்டுபவர்களுக்கு வெற்றியும் (ஜெயம்), மங்களமும் சாந்தமாக தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பவுர்ணமியில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகன் யானை வாகனத்தில் புறப்பாடாகிறார். வலது கால் தூக்கிய நடராஜர்: மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் சுந்தரேஸ்வரர் கோயில் இருக்கிறது. இங்கு சிவன், வடக்கு நோக்கிய சன்னதியில், கஜபிருஷ்ட விமானத்தில் கீழ் அருளுகிறார். லிங்கத்தின் பாணத்தில் சிவனின் முழு உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் மீனாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலக்காலை தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார். மதுரையில் அருளும் மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அமைக்கப்பட்ட சன்னதி என்பதால், இவ்வாறு நடராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை "தன்பாதம் தூக்கிய நடராஜர்' என்றும் அழைக்கிறார்கள. நடராஜர் வழிபாட்டிற்குரிய ஆறு நாட்களில், இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சரபேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் இவருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.


* மலைக்கோயில்களான திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது. இங்குள்ள காளி, ஜெயமங்களதன்மகாளி என்றழைக்கப்படுகிறாள்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: