கோவில் பெயர் : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : ஆபத்சகாயேஸ்வரர்
அம்மனின் பெயர் : பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி
தல விருட்சம் : பவள மல்லிகை
கோவில் திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை.
முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,
ஆடுதுறை அஞ்சல் 612 101.
ஆடுதுறை அஞ்சல் 612 101.
திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 94 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சன்னதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றது.
* தந்தை மகன் உறவில் பிரச்னை இருந்தால் சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபடுகின்றனர்.
* தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
* பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
* கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
0 Comments: