வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  அக்னிபுரீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  புரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர்

அம்மனின் பெயர் :  கருந்தார் குழலி, சூளிகாம்பாள்

தல விருட்சம்     :   புன்னை மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, 
                                                           மாலை  4 மணி முதல் இரவு 9 மணி வரை. 

                    முகவரி :  அருள்மிகு கருந்தார்குழலி சமேத                                                                                          சரண்யபுரீஸ்வரர் திருக்கோவில்
                                           திருப்புகலூர்- 609 704. Ph: 94431 13025, 94435 88339
கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 138 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.

* வாஸ்து தோஷம் நீங்க: இங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வீடு, சிறந்த வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள் எனஅனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும். புதிய வீடு கட்டுபவர்கள், மூன்று செங்கல்களை பூஜித்து எடுத்து சென்று ஈசான மூலை, அக்னி மூலை, பூஜை அறையில் தலா ஒரு செங்கல் வீதம் வைத்து வீடு கட்டுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. எனவே இத்தல இறைவனை "வாஸ்துநாதர்' என்றும் அழைக்கின்றனர். சுகப்பிரசவம் ஆக: இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை ஏற்படும் பெண்கள் இங்குள்ள அம்பாளை வழிப்பட்டால் அருள்பார்வை கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம். சாயரட்சை காலத்தில் ராஜராஜேஸ்வரி கோலத்தில் அம்பாள் வெள்ளைப்புடவை அணிவிப்பது வழக்கம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது. காலசம்ஹார மூர்த்தி இங்கு தனியாக மூலஸ்தானம் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

* பாணாசுரன் வெட்டிய அகழி இப்போதும் கூட காணப்படுகிறது. இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: