செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : சோற்றுத்துறை நாதர்
(ஓதனவனேஸ்வரர்,தொலையாச்செல்வநாதர்)

அம்மனின் பெயர்: அன்னபூரணி, தொலையாச்செல்வி

தல விருட்சம்    :  வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோவில், திருச்சோற்றுத்துறை போஸ்ட் - 613 202 கண்டியூர் வழி, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். Ph:  9943884377

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 76 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரம். அதன் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை . இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்குதொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணி என்றும் திருநாமங்கள்.

* அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும்பிணியும் விலகி விடும்.

* கௌதமர் வழிபட்ட காட்சியை விளக்கும் சிற்பம். அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர்.

* திருமணத்தடை உள்ளவர்கள் சித்திரையில் நடைபெறும் நந்தியின் திருமணதிருவிழாவை கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

(கும்பகோணத்திலிருந்து வருபவர்கள் தஞ்சை சாலையில் அய்யம்பேட்டை வந்து, பின் அய்யம்பேட்டை - கண்டியூர் சாலையில் 5 கி.மீ. பணித்தால் திருச்சோற்றுத்துறையை சென்று அடையலாம்.)

(தஞ்சை மற்றும் திருவையாறு வழியாக வருபவர்கள், தஞ்சாவூர் - திருவையாறு சாலையிலுள்ள திருக்கண்டியூரை அடைந்து, பின் கண்டியூர் - அய்யம்பேட்டை சாலையில் 5 கி.மீ. பணித்தால் திருச்சோற்றுத்துறையை சென்று அடையலாம்)
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: