வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோவில்.


கோவில் பெயர் : அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோவில்.

சிவனின் பெயர்  : கோமுக்தீஸ்வரர்

அம்மனின் பெயர் : ஒப்பிலாமுலைநாயகி

தல விருட்சம்   :  படர்அரசு

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை, 
                                                     மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : நிர்வாக அலுவலகம், அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோவில், திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை - 609 803. நாகப்பட்டினம் மாவட்டம். Ph:04364 - 232 055.

கோவில் சிறப்பு : 

*  1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

*  இது 99 வது தேவாரத்தலம் ஆகும்.

*  திருமூலரின் ஜீவ சமாதி இங்கு உள்ளது.

* இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படுகிறது. இத்தலவிநாயகர் துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் லிங்கத்தின்மீது, பசு பால் சொரியும் சிலை இருக்கிறது. இதனை "கோரூபாம்பிகை' என்கின்றனர். அருகில் சனீஸ்வரர் இருக்கிறார். 

* நவக்கிரக சன்னதி கிடையாது.

* ஒரே இடத்தில் மூன்று சூரியன் இருப்பது விசேஷமான தரிசனம்
.
* மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருக்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

*  இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: