கோவில் பெயர் : அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)
அம்மனின் பெயர்: கல்யாணசுந்தரி
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவில், திருநல்லூர்-614208. வலங்கைமான் வட்டம்,
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.Ph: 93631 41676
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 83 வது தேவாரத்தலம் ஆகும்.
* இறைவன் சுயம்பு லிங்கமாக இவர் தினமும் ஐந்து நிறத்தில் காட்சியளிப்பதால் "பஞ்சவர்ணேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.
* அம்மன் திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். இது தவிர 8 கரங்களுடன் ஆடும் நடராஜர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், காசி விஸ்வநாதர், அகத்தியர், கணநாதர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
* மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக வளைகாப்பு நடத்தியும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
0 Comments: