கோவில் பெயர் : அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோவில்
சிவனின் பெயர் : கண்ணாயிரமுடையார்.
அம்மனின் பெயர் : முருகுவளர்க்கோதை நாயகி.
தல விருட்சம் : கொன்றை மரம்.
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை
முகவரி : அருள்மிகு கண்ணாயிமுடையார்திருக்கோவில்,
குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்)-609 117
தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 094422 58085
கோவில் சிறப்பு :
* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 17 வது தேவாரத்தலம் ஆகும்.
* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* இந்திரன் வழிபட்டுச் சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கையாகும்.
* திருமணமாகாதோர் இக்கோயிலுக்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது.
* மாணிக்கவாசகர், சேக்கிழார், ராமலிங்க அடிகளார் தரிசனம் செய்துள்ளனர்.
* குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அர்த்த ஜாம பூஜையில் பால், பழம் நைவேத்யம் செய்து, அன்னதானம் போட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை.
0 Comments: