வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவில்







கோவில் பெயர் :  அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவில்

சிவனின் பெயர் :  முல்லைவனநாதர்

அம்மனின் பெயர் : அணிகொண்ட கோதையம்மை

தல விருட்சம் :     முல்லை

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 12.30 மணி வரை , 
                               மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோவில், திருமுல்லைவாசல் - 609 113.
 நகாப்பட்டினம் மாவட்டம். Ph: 094865 24626


கோவில் சிறப்பு :

* சோழர்களால் கட்டப்பட்டது.

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 7 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் மூன்றரை அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில்  வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.


* சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை   ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.

* இத்தலத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் கடற்கரை அமைந்துள்ளது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: