வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   பால்வண்ணநாதர்

அம்மனின் பெயர் : வேதநாயகி

தல விருட்சம் :     வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 11. மணி வரை , 
                               மாலை 5.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை

முகவரி : அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோவில், திருக்கழிப்பாலை-608 002, சிவபுரி போஸ்ட், அண்ணாமலை நகர், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 4 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது.  சிவலிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

 * சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: