புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில்


கோவில் பெயர் : அருள்மிகு ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில்  

சிவனின் பெயர்  : சுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார்.

அம்மனின் பெயர்: மங்களாம்பிகை, பங்கஜவல்லி

தல விருட்சம்   :  வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 11 மணி வரை, 
                                                     மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி :  அருள்மிகு ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில், ஆவூர் அஞ்சல்,
வழி கும்பகோணம், வலங்கைமான் வட்டம் - 612 701. Ph:94863 03484


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 84 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு மூலவர் பசுபதீசுவரர் சுயம்புலிங்கவடிவில் அருள்பாலிக்கிறார்.

* இத்தலத்தில் 5 பைரவர்கள் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் அருளுகின்றனர். எனவே இத்தலம் பஞ்ச பைரவர் தலம் என அழைக்கப்படுகிறது.

* இத்தலத்தில் மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இதில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. தேவாரத்தில் பங்கயமங்கை விரும்பும் ஆவூர், என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே. இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார்.

* திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

* கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது. கல்வெட்டுச் செய்தியில் ""நித்தவிநோத வள நாட்டைச் சேர்ந்த ஆவூர்க்கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார்,'' என்று இறைவனின் பெயர் குறிப்பிடப்படுகிறது.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: