செவ்வாய், 28 ஜூன், 2016

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்

அம்மனின் பெயர்: சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி

தல விருட்சம்    :  வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில், 
திருப்பந்துருத்தி - அஞ்சல் (வழி) கண்டியூர் - 613 103 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் Ph: 04365 - 322 290, 94865 76529

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 74 வது தேவாரத்தலம் ஆகும்.

* சோழர்களால் கட்டப்பட்டது.

* இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சப்தஸ்தான தலங்களில் ஆறாவது தலம்.

* மகிடனை யழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும்.

* அப்பரால் மடம் அமைக்கப்பட்ட சிறப்புடையது. அப்பரும் சம்பந்தரும் உழவாரத்தொண்டு செய்த தலம். அப்பருக்கு இறைவன் காட்சி தந்த தலம். இத் தலத்தில் நந்தி விலகியுள்ளது.

* அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும் பூந்துருத்தி காடவநம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. பூந்துருத்தி காடவநம்பியின் அவதாரத்தலம்.

* பித்ரு சாபம் நீங்க அமாவாசையன்று கிரிவலம் வந்து இறைவனைவழிபட்டால் சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள சன்னதிகளில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.

* காசிபமுனிவரின் கடும் தவத்திற்கு மகிழ்ந்து இறைவன் இங்குள்ள கிணற்றில் 13 கங்கையையும் பொங்கி எழச்செய்து ஆடி அமாவாசை அன்று காட்சி தந்த தலம்.

* இங்கு அமாவாசை கிரிவலம் சிறப்பு. இக்கோயில்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: