வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோவில்





கோவில் பெயர் :  அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   சப்தபுரீசுவரர்

அம்மனின் பெயர் : ஓசைகொடுத்த நாயகி

தல விருட்சம் :   கொன்றை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, 
                                                             மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில், 
திருக்கோலக்கா- 609 110, சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம். Ph 04364-274 175


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 15 வது தேவாரத்தலம் ஆகும்.

* இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர்      கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.  

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* சம்பந்தருக்கு இறைவன் பொற்தாளம் கொடுத்து அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

* அதிகார நந்தி சன்னதிகள் உள்ளன.

* கோயிலின் எதிரில் திருக்குளம் ஆனந்ததீர்த்தம், முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசனம்-     உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம், நுழையும் போது நால்வர். அதிகார நந்தி சன்னதிகள் உள்ளன.

* வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், ""ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த    நாயகியே, பேசும் சக்தியைக்கொடு, என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர    வேண்டும்.

* மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள்  இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: