வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்






கோவில் பெயர் :  அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்

அம்மனின் பெயர் : பெரியநாயகி, திருநிலைநாயகி

தல விருட்சம் :   பாரிஜாதம், பவளமல்லி

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 1 மணி வரை , 
                               மாலை 4 மணி முதல் இரவு 4 மணி வரை

முகவரி : அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோவில், சீர்காழி- 609 110. நாகப்பட்டினம் மாவட்டம். Ph 04364-270 235


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* சோழர்களால் கட்டப்பட்டது.

* இது 14 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இக்கோயிலுக்குள்ளேயே திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது.      இங்கு சம்பந்தர் மூலவராக உள்ளார். அப்பர், சுந்தரர்,  மாணிக்கவாசகர்,    வெளியே தனியாக உள்ளனர். சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும்  நடுவே சம்பந்தர் சன்னதி உள்ளது. இதனை  சோமாஸ்கந்த அமைப்பு என்று  கூறுவார்கள்.

* இத்தலத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்மதீர்த்தம், காளி, பராசர,  புறவநதி, கழுமலநதி, விநாயகநதி ஆகியவை முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.

* இந்திரனுக்காக இத்தல இறைவன் மூங்கில் மரமாக காட்சி கொடுத்ததால்    மூங்கில் தல விருட்சமாக உள்ளது.

* வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.

* குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் குழந்தை    பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: