புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்


கோவில் பெயர் : அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்

சிவனின் பெயர்  :சிவக்கொழுந்தீசர்

அம்மனின் பெயர்: பெரியநாயகி

தல விருட்சம்   :  வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை, 
                                                      மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில், 
திருச்சத்திமுற்றம்-612 703. Ph:04374 267 237, 94436 78575, 94435 64221

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 85 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

* இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.

* நாரைவிடு தூது பாடிய சத்திமுற்றுப்புலவர் இவ்வூரைச் சேர்ந்தவர்.

* சக்திமுற்றத்தில் இருந்து அம்பிகை ஈசனை நினைத்து தவம் இருந்தாள். ஆனால் ஈசன் வராமல் காலம் தாழ்த்தினார். மனம் தளராமல் பக்தியையும், தவத்தையும் தீவிரப்படுத்தி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன் ஜோதிசொரூபமாக காட்சி தந்தார். தன்முன் இருப்பது ஈசன் என்பதை உணர்ந்த அம்பிகை தீப்பிழம்பையே தழுவி ஆனந்தப்பட்டாள். ஒற்றை காலை கீழும் மற்றொரு காலை ஈசன்மீதும் வைத்து இரு கரங்கலால் ஈசனை தழுவி நிற்கும் தோற்றம் மூலவராக அமைந்தது. இந்த கோயிலில் வந்து வணங்கிச் சென்றால், திருமணம் கைகூடும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: