கோவில் பெயர் : அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : சிவலோகநாதர்
அம்மனின் பெயர் :சவுந்திரநாயகி
தல விருட்சம் : புங்கமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை
முகவரி : அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்,
திருப்புங்கூர் - 609 112. நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 09486717634
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* இது 20 வது தேவாரத்தலம் ஆகும்.
* இராஜேந்திர சோழன் காலத்தில் கோயில் திருப்பணிகள் நடந்துள்ள கோயில்.
* நந்தனாருக்காக சிவபெருமான் நந்தியை விலகி இருக்கச் சொன்ன தலம்.
* இத்தலத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு திருப்புன்கூர் என்ற பெயர் வந்தது.
* நாக தோசம், பூர்வ ஜென்ம பாவ தோசம் ஆகியவை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தங்கள் தோசங்கள் நிவர்த்தி ஆகும்.
* இத்தலத்தில் புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
0 Comments: