கோவில் பெயர் : அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோவில்
சிவனின் பெயர் : சவுந்தரேஸ்வரர் (அழகியநாதர், தாலவனேஸ்வரர்)
அம்மனின் பெயர் : பிரஹந்நாயகி, பெரியநாயகி
தல விருட்சம் : பனைமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : அருள்மிகு சவுந்தரேஸ்வர்திருக்கோவில்
திருப்பனையூர் - 609 504, திருவாரூர் மாவட்டம்.Ph:04366-237 007
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 136 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* பிரகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து விநாயகர் சன்னதி உள்ளது. கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சன்னதி உள்ளது. இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் ""இராசேந்திர சோழப் பனையூர்'' என்று குறிக்கப் பெறுகின்றது சொல்லப்படுகிறது.
* பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.
0 Comments: