சனி, 25 ஜூன், 2016

அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் :  அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : சவுந்தர்யேஸ்வரர்வரர்

அம்மனின் பெயர் : திரிபுரசுந்தரி

தல விருட்சம் :  புன்னை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                               மாலை 4.30 மணி முதல் இரவு 8 .30 மணி வரை

முகவரி : அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோவில், திருநாரையூர்-608 303, காட்டு மன்னார்கோவில் வட்டம், கடலூர் மாவட்டம்
Ph: 094425 71039, 94439 06219

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 33 வது தேவாரத்தலம் ஆகும்.

*  சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.


* அதிசயத்தின் அடிப்படையில்: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.

* மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: