கோவில் பெயர் : அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : சுவர்ணபுரீஸ்வரர்
அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை
தல விருட்சம் : வன்னி, வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : செம்பொனார் கோவில், சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், செம்பொன்பள்ளி-609309. நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 99437 97974
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 105 வது தேவாரத்தலம் ஆகும்.
* இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* இங்குள்ள சிவலிங்கம் பதினாறு இதழ்களுடைய தாமரை இதழ் போன்ற ஆவுடைகளில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம்.
* லட்சுமி, திருமாலை தன் கணவனாக அடைந்ததும் இத்தல இறைவனை வழிபட்டு தான்.எனவே தான் இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்று பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு.
* எது வேண்டுமானாலும் கேட்கலாம். அனைத்தையும் நிறைவேற்றி தருகிறார். குறிப்பாக தியானப்பயிற்சி செய்பவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு தியானப்பயிற்சி ஆரம்பிப்பது சிறப்பு.
0 Comments: