வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்( திருக்கண்டீஸ்வரம்)


கோவில் பெயர்   : அருள்மிகு  பசுபதீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  பசுபதீஸ்வரர்

அம்மனின் பெயர் :  சாந்த நாயகி

தல விருட்சம்     :   வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 9 மணி முதல் 12 மணி வரை, 
                                                         மாலை  4 மணி முதல் இரவு 8 மணி வரை. 


முகவரி : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில் 
திருக்கண்டீஸ்வரம். (வழி) சன்னாநல்லூர், 
திருவாரூர்-610 001. திருவாரூர் மாவட்டம்.
Ph:04366 - 228 033

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 135 வது தேவாரத்தலம் ஆகும்.

*   இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம்.

* பிராகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், வைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகளும் உள்ளன.

* திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள ஜேஷ்டா தேவியை வழிபாடு செய்கின்றனர். சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: