கோவில் பெயர் : அருள்மிகு மேகநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : மேகநாதசுவாமி (மிஹராஅருணேஸ்வரர், முயற்சிநாதர் )
அம்மனின் பெயர் : லலிதாம்பிகை, சவுந்திரநாயகி
தல விருட்சம் : மந்தாரை, வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு லலிதாம்பிகா சமேத
மேகநாதசுவாமி திருக்கோவில்,
திருமீயச்சூர் - 609 405.திருவாரூர் மாவட்டம்.
Ph: 04366-239 170, 94448 36526.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 119 வது தேவாரத்தலம் ஆகும்.
* திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம்.
* இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இதனை தினமும் படித்து லலிதாம்பிகையை வழிபட சகல நலன்களும், செல்வச்செழிப்பையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது.
* சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
* மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்கின்றனர். இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.
* நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர்.
0 Comments: