வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில்





கோவில் பெயர் :  அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில்

சிவனின் பெயர் :  திருமேனியழகர்

அம்மனின் பெயர் : வடிவாம்பிகை

தல விருட்சம் :     கண்ட மரம், தாழை

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 12 மணி வரை , 
                               மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை

முகவரி : அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில், மகேந்திரப்பள்ளி -609 101. கோயிலடிப் பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம். Ph:04364 292 309


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 6 வது தேவாரத்தலம் ஆகும்.

* அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.

* முன்வினைப்பயனால் சிரமப்படுபவர்களும், ஜாதகத்தில் சூரிய, சந்திர தசை நடப்பவர்களும் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பிரம்மனுக்குரிய தீர்த்தம் என்பதால் இங்கு நீராடினால், துன்பப்பட வேண்டும் என எழுதப்பட்ட தலையெழுத்து மாறி, நல்விதி ஏற்படும் என்பது நம்பிக்கை. கல்வியில் சிறக்கவும், நாகதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

 * நவக்கிரக சன்னதி இல்லை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: