கோவில் பெயர் : அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : உமாமகேஸ்வரர் (பூமிநாதர்)
அம்மனின் பெயர் : கொம்பியல்கோதை (சாகா கோமளவல்லி)
தல விருட்சம் : அரசமரம், வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோவில்,
கோனேரிராஜபுரம் போஸ்ட்-612 201,
மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்
. Ph:0435 - 244 9830, 244 9800
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* சோழர்களால் கட்டப்பட்டது
* இது 97 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* பூமாதேவி பூஜித்து பேறு பெற்ற தலம்.
* இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோயில் தல விருட்சமாக உள்ளது.இக்கோயில் .
* சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின்புறம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே அருள்பாலிக்கிறார்கள்.
* வைத்தியநாதருக்கு தனி கோயில் உள்ளது. இத்தல விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் எனப்படும்.
* சகல விதமான நோய்களும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபட்டால் குணமாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
* குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள்,வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள் திங்கள் கிழமையில் இங்குள்ள சிவனுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் செய்து "வசுதரா' என்ற யாகம் செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
* திரிபுரத்தை எரித்த திரிபுரசம்ஹாரமூர்த்தி இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எமபயம், எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது ஐதீகம்.
* படிப்பில் மந்தம் உள்ளவர்கள், ஞாபக சக்தி வேண்டுபவர்கள் இங்குள் ஞானகுழம்பு தீர்த்தம் சாப்பிட்டால் சிறந்த பலன் உண்டு.
0 Comments: