வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு   வர்த்தமானீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வர்த்தமானீஸ்வரர்

அம்மனின் பெயர் :  மனோன்மணி

தல விருட்சம்     :   பின்னை

கோவில் திறக்கும் நேரம் :   காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, 
                                                          மாலை  4 மணி முதல் இரவு 9.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோவில், 
திருப்புகலூர் - 609 704. திருவாரூர் மாவட்டம். Ph 04366 - 292 300, 94431 13025

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 139 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* முருக நாயனார் அவதார தலம்.

* திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம். 

* நவக்கிரகங்கள் "ட' வடிவில் இருப்பது விசேஷமான அமைப்பு.

* இத்தலவிநாயகர் வாதாபிகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் எனப்படுகிறது. கோயிலைச் சுற்றி மூன்று புறமும் தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்து லிங்கத்தை பெயர்த்துச் செல்ல முயன்ற பாணாசுரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம்இது. 

* பிரகாரத்தில் நளன் வழிபட்ட சனீஸ்வரர் காட்சி தருகிறார். அருகில் நளன் வணங்கியபடி இருக்கிறார். சரஸ்வதி, அன்னபூரணி இருவரும் அருகருகில் இருக்கின்றனர். வாதாபி கணபதி அருகில் இரண்டு அசுரர்கள் வணங்கியபடி இருக்க, தனிச்சன்னதியில் இருக்கிறார்.

* வர்த்தமானீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. நிகழ்காலத்தில் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேற, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: