கோவில் பெயர் : அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : வில்வவனேசுவரர்
அம்மனின் பெயர் : வளைக்கைநாயகி
தல விருட்சம் : வில்வமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6.மணி முதல் 11. மணி வரை,
மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரை
முகவரி : அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோவில் திருவைகாவூர்- 613 304. தஞ்சாவூர் மாவட்டம்
094435 86453, 96552 61510
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது
* இது 48 வது தேவாரத்தலம் ஆகும்.
.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு காரணமான தலம்.
* வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்
* நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறது.
* அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.
0 Comments: