கோவில் பெயர் : அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்
அம்மனின் பெயர் : உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை
தல விருட்சம் : கொன்றை
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அரும்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோவில்,
சீயாத்தமங்கை - நன்னிலம் வட்டம். நாகப்பட்டினம் - 609 702 Ph:4366-270 073
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 144 வது தேவாரத்தலம் ஆகும்.
* மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல அம்மன் இருமலர்க்கண்ணம்மையின் நெற்றியில், சிவனைப்போல நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது சிறப்பம்சமாகும்.திருநீலநக்க நாயனார் அவதார தலம்.
* திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.
0 Comments: